உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணவாளநகர் குடியிருப்பு பகுதி காலி மனைகளில் கழிவுநீர்

மணவாளநகர் குடியிருப்பு பகுதி காலி மனைகளில் கழிவுநீர்

கடம்பத்துார், கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது மணவாளநகர். இங்கு 15 வார்டுகளில் 30க்கும் மேற்பட்ட நகர்களும், 200க்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன. இதில் 40,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி மனைகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவுநீர், குப்பையில் பன்றிகள் உலாவுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் குப்பையும் காலிமனைகளில் குவிந்து கிடக்கிறது. இதனால் வெங்கத்துார் ஊராட்சி பகுதிவாசிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பையை அகற்றவும் கழிவுநீர் கால்வாய் அமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெங்கத்துார் ஊராட்சி பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ