உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பட்டாபிராமபுரத்தில் முருகன் வீதியுலா

பட்டாபிராமபுரத்தில் முருகன் வீதியுலா

திருத்தணி,:திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இருந்து, நேற்று, காலை 8:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் மலைப்படிகள் வழியாக திருக்குளம் வந்தடைந்தார். பின், ம.பொ.சி., சாலை, அக்கைய்யநாயுடு சாலை, சித்துார் சாலை, பழைய சென்னை சாலை வழியாக சென்னை - திருப்பதி தேசிய சாலைக்கு, மாட்டு வண்டியில் உற்சவர் முருகப்பெருமானை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.மதியம், 1:00 மணிக்கு பட்டாபிராமபுரம் பேருந்து நிறுத்தத்திற்கு உற்சவர் முருகன் வந்த போது, கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் என, 1,000க்கும் மேற்பட்டோர் சிறப்பு பூஜைகள் நடத்தி வரவேற்றனர். மேலும், கிராம இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கோலாட்டம், வாள் வீச்சு மற்றும் நடனத்துடன் உற்சவரை வரவேற்று கிராமத்திற்கு அழைத்து சென்றனர்.பின், மாலை 5:00 மணிக்கு அங்குள்ள பெருமாள் கோவில் மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, கிராம வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பெண்கள் தேங்காய் உடைத்தும், பூஜைகள் நடத்தியும் வழிபட்டனர்.நள்ளிரவில், உற்சவர் முருகப்பெருமான் மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்றடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை