உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பெயர் பொருத்தும் பயிற்சி

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பெயர் பொருத்தும் பயிற்சி

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் லோக்சபா தனி தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த பயிற்சியில், கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 26 மண்டலங்களில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள இருக்கும் மண்டல அலுவலர்கள், துணை மண்டல அலுவலர்கள், மண்டல உதவியாளர்கள் என, 78 பேர் பயிற்சியில் பங்கேற்றனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் தலைமையில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர் பெயர் பட்டியலை பொருத்தி, அதற்கு 'சீல்' வைப்பது குறித்து செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்காக 'டம்மி' வேட்பாளர் பெயர்கள் பயன்படுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ