உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தடுப்பணை சீரமைப்பதில் அலட்சியம் தண்ணீரை தேக்க முடியாத அவலம்

தடுப்பணை சீரமைப்பதில் அலட்சியம் தண்ணீரை தேக்க முடியாத அவலம்

பொன்னேரி: பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் கிராமத்தில் ஓடைக்கால்வாயின் குறுக்கே மழைநீரை சேமித்து வைக்கவும், உவர்ப்பு நீர் உட்புகுவதை தடுக்கவும் கட்டப்பட்ட தடுப்பணை சேதம் அடைந்து கிடக்கிறது.தடுப்பணையின் கான்கிரீட் கட்டுமானங்கள் உடைந்தும், சிதைந்தும் கிடக்கின்றன. தடுப்பணை சேதம் அடைந்து, ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை அதை சீரமைக்க எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.அதிகாரிகளின் அலட்சியத்தால் மழைக்காலங்களில் தடுப்பணையில் ஒரு சொட்டு தண்ணீர் தேக்கி வைக்க முடியா, நிலை உள்ளதுடன், பழவேற்காடு ஏரியின் உவர்ப்பு நீரும் உடைப்புகள் வழியாக உட்புகுந்து, அருகில் உள்ள விவசாய நிலங்களை பாழாக்கி வருகிறது.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:திருப்பாலைவனம், அவரிவாக்கம், தொட்டிமேடு, பிரளயம்பாக்கம் உள்ளிட்ட கிராங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருக்கிறது. மேற்கண்ட ஒடைக்கால்வாயில் தேங்கும் மழைநீரை பயன்படுத்தி விவசாயம் செய்கிறோம்.அதிக மழை பொழிவின்போது, ஓடைக்கால்வாய் வழியாக மழைநீர் வெளியேறி, பழவேற்காடு ஏரிக்கு செல்கிறது. கால்வாயில் நீர்வரத்து குறைந்த உடன், பழவேற்காடு ஏரியின் உவர்ப்புநீர் அதே கால்வாய் வழியாக பின்நோக்கி பயணித்து, நன்னீருடன் கலந்துவிடுகிறது.தடுப்பணை சேதத்தால், மழைநீரை சேமித்து வைக்க முடியாமலும், உவர்ப்பு நீரால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் முடியாமல் தவிக்கிறோம். மேலும் இந்த கால்வாயும் துார்வாரப்படாமல் இருக்கிறது. கடலில் கலந்து வீணாகும் மழைநீரை ஓடைக் கால்வாயில் தேக்கி வைக்க கால்வாயை ஆழப்படுத்தி இருபுறமும் கரைகள் அமைத்து, புதிய தடுப்பணை ஒன்றை தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை