மேலும் செய்திகள்
வழிப்பறி திருடன் சிக்கினான்
19-Feb-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது அரும்பாக்கம். இந்த கிராம ஊராட்சியில், திருப்பேர், பங்காரம்பேட்டை மற்றும் அரும்பாக்கம் என, 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில், அரும்பாக்கம் கிராமம், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாதையை கடந்து செல்ல வேண்டும்.இந்த கிராமத்தில் மட்டும் 300 வீடுகளில், 1,100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள், கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்ட எவ்வித அவசர தேவைக்கும், பூண்டி வழியாக திருவள்ளூர் வந்து செல்ல வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து, அரும்பாக்கம் கிராமம் சாலை அமைக்கப்பட்டது. அதன்பின், சாலை அமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறியது.மேலும், அந்த வழித்தடம் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால், புதிய சாலை அமைக்க இயலவில்லை. இதற்காக, கிராமவாசிகளின் கோரிக்கையை ஏற்று, வனத்துறை அனுமதி வழங்கியது.இதையடுத்து, 65 லட்சம் ரூபாய் மதிப்பில் குண்டும், குழியுமாக சேதமடைந்த 2 கி.மீ., சாலை புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், கிராமவாசிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
19-Feb-2025