உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நீர்வரத்து கால்வாய் பராமரிப்பு இல்லை குளத்திற்கு தண்ணீர் செல்வதில் தடங்கல்

நீர்வரத்து கால்வாய் பராமரிப்பு இல்லை குளத்திற்கு தண்ணீர் செல்வதில் தடங்கல்

திருத்தணி: திருத்தணி ஒன்றியம், வி.கே.ஆர்.புரம் ஊராட்சி பொதுக்குளம், திருத்தணி--- நொச்சிலி மாநில நெடுஞ்சாலையோரம் உள்ளது. இந்த குளத்திற்கு, மலைப்பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் மற்றும் பொந்தலாகண்டிகை பகுதியில் இருந்து வரும் வெள்ளநீர் வருகிறது. இதற்காக, மேற்கண்ட இரு பகுதிகளில் இருந்தும் தண்ணீர் வருவதற்கு நீர்வரத்து கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாயை முறையாக ஊராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், தற்போது நீர்வரத்து கால்வாய் முழுதும் செடிகள் வளர்ந்தும், ஆங்காங்கே கால்வாய் புதைந்துள்ளன. இதனால் ஊராட்சி பொதுக்குளத்திற்கு மழைநீர் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் குளம் நிரம்பாமல் உள்ளது. குளத்தில் தண்ணீர் இருந்தால், வி.கே.ஆர்.புரம், பொந்தலாகண்டிகை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் விவசாய கிணறுகளிலும் நிலத்தடி தண்ணீர் வெகுவாக உயரும்.நீர்வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டும் என, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை. எனவே மாவட்ட நிர்வாகம், நீர்வரத்து கால்வாயை சீரமைத்து, குளத்திற்கு தண்ணீர் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி