உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழமையான மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பழமையான மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

திருவாலங்காடு: கனகம்மாசத்திரம் -திருவாலங்காடு மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது முத்துக்கொண்டாபுரம் கிராமம். இங்கு சாலையின் இருபுறமும் பழமையான புளிய மரங்கள் அமைந்துள்ளன.இந்நிலையில் நேற்று காலை 7:00 மணியளவில் காற்று வீசியது இதில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளிய மரத்தின் கிளை உடைந்து சாலை நடுவே விழுந்தது. ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.இருந்த போதும் சரக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கனகம்மாசத்திரம் போலீசார் சாலையில் விழுந்த மரத்தை ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் அகற்றினர்.இதனால் அப்பகுதியில் காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ