உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடியில் நுாலகம் திறப்பு

கும்மிடியில் நுாலகம் திறப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி வசந்த பஜார் சாலையில், பாழடைந்த கட்டடத்தில் நுாலகம் இயங்கி வந்தது. அதை இடித்து, தரை மற்றும் முதல் தளம் சேர்த்து, 2,280 சதுர அடியில், 98 லட்சம் ரூபாய் செலவில் புதிய நுாலக கட்டடம் நிறுவப்பட்டது.நுாலக கட்டட திறப்பு விழா நடந்தது. கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் நுாலகத்தை திறந்து வைத்தார். மாவட்ட நுாலக அலுவலர் ராஜேஷ்குமார், வாசகர் வட்ட தலைவர் வேலு, நுாலகர் தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ