பழுதான கட்டடத்தில் இயங்கும் ஊராட்சி மன்ற அலுவலகம்
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் அகூர் ஊராட்சியில், அகூர் கிராமம், அகூர் காலனி, நத்தம் உள்பட நான்கு கிராமங்கள் உள்ளன. இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அகூர் கிராமம் நுழைவு வாயிலில் கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது. ஊராட்சி அலுவலக கட்டடத்தை முறையாக பராமரிப்பு இல்லாததால் கட்டடம் முழுதும் விரிசல் அடைந்தும், மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து விடுகின்றன. கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பல மாதங்களாக ஊராட்சி அலுவலகம் திறக்காமல் பூட்டியே உள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகம் , பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.