உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோயம்பேடிற்கு கூடுதல் பஸ் இயக்க பயணியர் கோரிக்கை

கோயம்பேடிற்கு கூடுதல் பஸ் இயக்க பயணியர் கோரிக்கை

ஊத்துக்கோட்டை:தமிழக - ஆந்திர எல்லையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. இதைச் சுற்றி, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மாணவர்கள் மேனிலை மற்றும் கல்லுாரி படிப்பிற்கு ஊத்துக்கோட்டை வந்து செல்கின்றனர்.இவர்களின் பயணத்திற்கு ஊத்துக்கோட்டை அரசு பேருந்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் உதவியாக உள்ளது. ஊத்துக்கோட்டை பணிமனையில் இருந்து கோயம்பேட்டிற்கு ஒரு பேருந்தும், 5 பேருந்து செங்குன்றத்திற்கும் இயக்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை.கோயம்பேட்டிற்கு ஒரு பேருந்து மட்டும் இயக்குவதால், படிக்கட்டு பயணம் மேற்கொள்ளும் அவல நிலை உள்ளது. வியாபாரிகள் பேருந்தில் இடம் கிடைக்காத நிலையில் செங்குன்றம், பெரியபாளையம் சென்று அங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டி உள்ளது.எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்கள், வியாபாரிகள் நலன் கருதி ஊத்துக்கோட்டை பணிமனையில் இருந்து கோயம்பேட்டிற்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை