உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பரிதாப நிலையில் பேரம்பாக்கம் பஸ் நிலையம் 15 ஆண்டுகளாக பராமரிக்கப்படாத அவலம்

பரிதாப நிலையில் பேரம்பாக்கம் பஸ் நிலையம் 15 ஆண்டுகளாக பராமரிக்கப்படாத அவலம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில், முதல்நிலை ஊராட்சியான பேரம்பாக்கத்தில் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையம், கடந்த 2007 - 08ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதுார் தொகுதி தி.மு.க., - எம்.பி., கிருஷ்ணசாமி தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி, பேரம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள நரசிங்கபுரம், கூவம் இருளஞ்சேரி, காவாங்கொளத்துார், சிற்றம்பாக்கம், கிளாம்பாக்கம், சத்தரை என, 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்னை, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்குள்ள தபால் நிலையம், அரசு மருத்துவமனை, வேளாண்மை விற்பனை நிலையம், தீயணைப்பு நிலையம், சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு வரும் பயனாளிகள் மற்றும் அலுவலர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேருந்து நிலையம் திறப்பு விழா நடந்து 15 ஆண்டுகளாகியும், இதுவரை எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இங்குள்ள பேருந்து நிலையத்தில் போதுமான இருக்கை மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், 'குடி'மகன்களின் கூடாரமாக மாறி, குப்பை சேகரமாகி பரிதாபமான நிலையில் உள்ளது, பயணியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் செய்து தரவும், சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி