தீக்குளித்த பிளஸ் 2 மாணவி பலி
திருவள்ளூர்,திருவள்ளூரில் தனியார் பள்ளி பிளஸ் மாணவி, நேற்று முன்தினம் இரவு படித்துக் கொண்டிருந்ததார். நேற்று அதிகாலை, வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட பெற்றோர், மாணவியை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பலியானார். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் விசாரிக்கின்றனர்.