உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்றும், நாளையும் சொத்து வரி வசூல் முகாம்

இன்றும், நாளையும் சொத்து வரி வசூல் முகாம்

திருவள்ளூர்:கிராம ஊராட்சிகளில் சொத்து வரி வசூலிக்கும் சிறப்பு முகாம், இன்று முதல் இரண்டு நாள் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 526 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், 2024- - 25ம் ஆண்டிற்கான சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக் கட்டணம் ஆகியவற்றை வசூலிக்கும் வகையில், இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.இந்த முகாமில் கிராம மக்கள் அனைவரும் நடப்பாண்டு, தாங்கள் செலுத்த வேண்டிய வரியினங்களை நிலுவையின்றி முழுமையாக செலுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி, வரியினங்களை செலுத்தி ஊராட்சியின் வளர்ச்சிக்கு துணைபுரிய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை