உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாணவர்களுக்கு உபகரணம் வழங்கல்

மாணவர்களுக்கு உபகரணம் வழங்கல்

திருவள்ளூர், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணம் வழங்கப்பட்டது.திருவள்ளூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வை 9,122 மாணவ - மாணவியர் எழுத உள்ளனர். அவர்களுக்கு, திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணங்களை வழங்கினார். அவற்றை கலெக்டர் பிரதாப், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார். இதில், முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை