உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இளம் பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது

இளம் பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கொப்பூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 45. இவரது சகோதரர் ஏழுமலை. இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும், சுந்தரி, 23, மகள்; நிர்மல்குமார், 22, என்ற மகனும் உள்ளனர். முனியம்மாள் இறந்து விடவே, ஏழுமலை குழந்தைகளை தன் சகோதரரிடம் விட்டு விட்டு சென்று விட்டார். சுந்தரி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த 22ம் தேதி சுந்தரி வீட்டில் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட போது கர்ப்பமானது தெரிய வந்தது. விசாரணையில், அவரது வீட்டின் அருகே வசித்து வந்த கண்ணன், 40, என்பவர் சுந்தரியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார், கண்ணனை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை