ஆதிதிராவிட விடுதியில் செடிகள் அகற்றம்
திருவாலங்காடு, திருவள்ளூர் --- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் திருவாலங்காடில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு 850க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கி உண்டு, உறங்கி செல்ல மணவூர் சாலையில் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.இங்கு 10 மாணவர்கள் தங்கி வருகின்றனர். இந்நிலையில் விடுதி வளாகத்தில் செடிகள் முளைத்து புதராக காட்சியளிக்கிறது. அவ்வப்போது பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளதால் அகற்றி சீரமைக்க வேண்டும் என நம் நாளிதழில் கடந்த 7ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து விடுதி நிர்வாகம் விடுதியை சூழ்ந்த புதர்களை அகற்றி சீரமைத்தது .