உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாடகை காரை அடமானம் வைத்து மோசடி: மூவர் மீது வழக்கு

வாடகை காரை அடமானம் வைத்து மோசடி: மூவர் மீது வழக்கு

திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த குப்பம்மாள் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 33. இவர் மாருதி இர்டிகா கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரை கடந்த மே 5ம் தேதி கடலுார் மாவட்டம் அனுக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பவர் சூம் கார்ஸ் என்ற செயலி மூலம் தொடர்பு கொண்டு காரை வாடகைக்கு கேட்டு வாங்கியுள்ளார். அதன்பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. காரில் பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ். உதவியுடன் கண்காணித்த போது கார் திருப்பூரில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து கடந்த 2ம் தேதி சிலம்பரசன் திருப்பூர் சென்று பழனிச்சாமி என்பவரிடம் இருந்த தன் காரை கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு பழனிச்சாமி காரை சிவப்பிரகாஷ் 3 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளதாக தெரிவித்தார். கார் வேண்டுமானால் 3 லட்சம் ரூபாய் கொடுங்கள் இல்லையென்றால் காரை விற்று விடுவேன் என பழனிச்சாமி, அவரது நண்பர் ராஜ் கண்ணன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சிலம்பரசன் நேற்று முன்தினம் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் சிவப்பிரகாஷ், பழனிச்சாமி, ராஜ்கண்ணன் ஆகிய மூவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி