மேலும் செய்திகள்
ரோட்டை ஆக்கிரமித்துள்ள முட்செடிகளால் சிரமம்
09-Sep-2024
பொன்னேரி:பொன்னேரி அடுத்த சின்னகாவணம் பகுதியில் இருந்து, பெரும்பேடு செல்லும் மாநில நெடுஞ்சாலையின் ஓரங்களில் செடிகள் வளர்ந்து புதராக உள்ளன.இவை சாலை வரை நீட்டிக்கொண்டு இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாற்றம் அடைகின்றனர்.சாலையோர புதர்களில் வாகனங்கள் உரசுவதால், அதை தவிர்க்க வாகன ஓட்டிகள் சாலையின் நடுவில் பயணிக்கின்றனர். இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தடுமாறுகின்றன.வளைவுகளில் செல்லும்போது, எதிரில் வரும் வாகனங்களும் சரியாக தெரிவதில்லை. விபத்து ஏற்படுதவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.சின்னகாவணம்,தேவராஞ்சேரி, லட்சுமிபுரம், சத்திரம், கம்மவார்ப்பாளையம் வரை புதர்கள் சாலையோரத்தில் வளர்ந்து கிடக்கின்றன.வாகன ஓட்டிகள் சிரமம் கருதி, மேற்கண்ட சாலையின் ஓரங்களில் வளர்ந்தள்ள புதர்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.
09-Sep-2024