நெடுஞ்சாலையோரம் குவிந்து வரும் குப்பை நோய் அபாயத்தில் திருமழிசை பகுதிவாசிகள்
திருமழிசை:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருமழிசை பேரூராட்சி.இப்பகுதியில் நெடுஞ்சாலையேரம் பல இடங்களில் வணிக நிறுவனங்கள் மூலம் சேகரமாகும் குப்பை முறையாக அகற்றப்படாததால் குவிந்து வருகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தில் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் மற்றும் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருவதோடு தொற்று நாய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும் பேரூராட்சி நிர்வாகத்தினர் நெடுஞ்சாலையோரம் உள்ள அரசு சுவர்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிப்போம் டெங்கு காய்ச்சலை ஒழிப்போம் என பெயரளவிற்கு விழிப்புணர்வு வாசகம் வைக்கப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் ஆய்வு செய்து குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஒட்டிகள், பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.