உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணி ஜரூர்:நாளைக்குள் முடிக்க கலெக்டர் உத்தரவு

ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணி ஜரூர்:நாளைக்குள் முடிக்க கலெக்டர் உத்தரவு

திருவள்ளூர்:'ஓட்டுப்பதிவு நடைபெறும் மையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும், நாளை 14க்குள் முடிக்க வேண்டும்' என, அலுவலர்களுக்கு திருவள்ளூர் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.திருவள்ளூர் லோக்சபா தனித் தொகுதியில், திருவள்ளூர், பொன்னேரி-தனி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி- தனி மற்றும் மாதவரம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு, ஆண் 10,10,968, பெண் 10,46,755 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 375 என மொத்தம், 20,58,098 வாக்காளர்கள் உள்ளனர்.இந்த தேர்தலில், காங்., பா.ஜ., தே.மு.தி.க., நாம் தமிழர் உள்ளிட்ட, 14 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்காக, தொகுதி முழுதும், 2,256 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில், 14 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுவதால், ஓட்டுச்சாவடிக்கு ஒரே ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில், ஏதாவது கோளாறு ஏற்பட்டால், மாற்று இயந்திரம் பயன்படுத்தும் வகையில், கூடுதலாக 10 சதவீதம் என்ற அடிப்படையில், தற்போது 2,714 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், சட்டசபை தொகுதி வாரியாக வேட்பாளர்களின் சின்னங்கள் பொறுத்தப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.இந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த, சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, 'ஸ்ட்ராங்ரூம்' அறையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தேர்தல் வரும் 19ல் நடக்கிறது. ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததும், அன்றிரவே ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 'சீல்' வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன், வேப்பம்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரிக்கு கொண்டு செல்லப்படும். ஓட்டு எண்ணிக்கையான ஜூன் 4 வரை அங்குள்ள, 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும், அறையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும்.இந்நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை, ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் முன்னேற்பாடு பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது. இப்பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் கட்டுப்பாட்டு அறை, ஓட்டு எண்ணும் அறை, பல்வேறு உட்கட்டமைப்பு வசதி, பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் அத்தியாவசிய வசதி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.இப்பணியை நாளை(14)க்குள் முடித்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி