உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரி நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் கலப்பு

ஏரி நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் கலப்பு

திருமழிசை:சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் தண்டலம், செட்டிபேடு, பாப்பன்சத்திரம் உட்பட பல கிராமங்கள் உள்ளன.இப்பகுதி குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகளில் சேகரமாகும் கழிவுநீர் டேங்கர் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்ப டுகிறது.டேங்கர் லாரிகளில் ஏற்றி வரப்படும் கழிவுநீரை, சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்லாமல், சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் செட்டிபேடு பகுதியில் அமைந்துள்ள குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா எதிரே உள்ள இணைப்பு சாலை பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர் வரத்து கால்வாயில் திறந்து விடுகின்றனர்.இது அந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் நிலத்தடி நீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி குடிநீர் தரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து ஏரி நீர்வரத்து கால்வாயில் கழிவுநீரை விடும் கழிவுநீர் டேங்கர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென செட்டிபேடு பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !