உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சோளிங்கர் அரசு கல்லுாரி கட்டுமான பணி தீவிரம்

சோளிங்கர் அரசு கல்லுாரி கட்டுமான பணி தீவிரம்

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அரசு கலை கல்லுாரி செயல்பட்டு வருகிறது. சோளிங்கர் பாட்டிகுளம் அருகே தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வரும் இந்த கல்லுாரியில், சோளிங்கர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்த மாணவ, மாணவியர் ஏராளமானோர் இந்த கல்லாரியில் படித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு திருத்தணி அரசு கலை கல்லுாரியை விட சோளிங்கர் அரசு கலை கல்லாரி அருகில் அமைந்துள்ளது. பள்ளிப்பட்டு தாலுகாவில் அரசு கலை கலலுாரி ஏற்படுத்த வேண்டும் என பகுதிவாசிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், சோளிங்கரில் தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வரும் அரசு கலை கலலுாரிக்கு வாலாஜாபேட்டை சாலையில், ஜம்புகுளம் கூட்டு சாலை அருகே நிரந்தர கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டு காலமாக நடந்து வரும் பணிகள் விரைவில் நிறைவடைந்து வரும் கல்வியாண்டில் கல்லுாரி செயல்பட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ