உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையில் கொடிக்கம்பம், பேனர்கள் முதல்வர் உத்தரவை மீறும் உடன்பிறப்புகள்

நெடுஞ்சாலையில் கொடிக்கம்பம், பேனர்கள் முதல்வர் உத்தரவை மீறும் உடன்பிறப்புகள்

திருவள்ளூர்: முதல்வர் உத்தரவவையும் மீறி ஆளும் கட்சியினரே நெடுஞ்சாலையில் கொடிக்கம்பங்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைத்துள்ளனர். தடுக்க வேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, பள்ளிக்கரணையில் 2019ம் ஆண்டு நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட விளம்பர பதாகை விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ, 23, என்ற பெண் கீழே விழுந்து பின்னால் வந்த லாரியில் சிக்கி உயிரிழந்தார்.இதையடுத்து, உயர் நீதிமன்றம் நெடுஞ்சாலையில் விளம்பர பதாகை மற்றும் கொடிக்கம்பங்கள் வைக்க தடை விதித்தது. இந்த விஷயத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினும், உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுமாறு, கட்சியினருக்கு அறிவுறுத்தி இருந்தார்.அப்படி இருந்தும், கட்சி தலைவரின் அறிவுறுத்தலை மீறி, அரசு திட்ட விழாக்கள், பொது உறுப்பினர்கள் கூட்டம் முதல் பல்வேறு விழாக்களில் கொடிக்கம்பங்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைப்பது தொடர்கதையாக உள்ளது.மேலும், நிகழ்ச்சிக்கு வரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ,க்கள், கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலை, சொந்த கட்சியினரே பின்பற்ற மறுத்தால், மாற்று கட்சியினர் எவ்வாறு பின்பற்றுவர் என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையில் விளம்பர பதாகை மற்றும் கொடிக்கம்பங்கள் வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sundar
செப் 02, 2024 22:54

மீறினால் கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்...முடியுமா? எந்தக் கொம்பனாலும் முடியவே முடியாது. இதெல்லாம் சகஜமப்பா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை