உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வடதில்லை அங்கன்வாடியில் பாம்பு குழந்தைகள் அலறியடித்து ஓட்டம்

வடதில்லை அங்கன்வாடியில் பாம்பு குழந்தைகள் அலறியடித்து ஓட்டம்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, பேரிட்டிவாக்கம் ஊராட்சி, வடதில்லை கிராமத்தில் அங்கன்வாடி மையம் அங்குள்ள கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டடம் கட்டி, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சிதிலமடைந்த காணப்பட்ட இந்த கட்டடம் கடந்த, ரூ.78 ஆயிரம் ரூபாயில் சீரமைக்கப்பட்டது.மீண்டும் கட்டடம் பழுதடைந்ததால், அருகில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த மாதம் புதிதாக அங்கன்வாடி மையம் கட்ட 16 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் ஏற்கனவே உள்ள பழுதடைந்த கட்டடத்தை இடிக்க வேண்டி பூண்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் மனு வழங்கப்பட்டது.இந்நிலையில் நேற்று மதியம், 12:00 மணிக்கு கோவிலில் குழந்தைகள் தங்கி இருந்தனர். அப்போது அருகில் உள்ள அங்கன்வாடி மைய பழைய கட்டடத்தில், ‛புஸ், புஸ்' என்ற சத்தம் கேட்டுள்ளது. இதைப்பார்த்த ஆசிரியை தமிழரசி அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.பழுதடைந்த கட்டடத்தில் சிலர் சென்று பார்த்தபோது, அங்கு நல்ல பாம்பு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையறிந்த பெற்றோர் கோவிலில் இருந்த தங்களின் குழந்தைகளை கூட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் தில்லைகுமார் தேர்வாய் கண்டிகை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சென்று, 5 அடி நீள நல்ல பாம்பை பிடித்துச் சென்றனர்.வடதில்லை அங்கன்வாடி மைய பழைய கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ