உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுவாபுரி கோவில் பக்தர்களுக்கு தீர்வு

சிறுவாபுரி கோவில் பக்தர்களுக்கு தீர்வு

ஆரணி, திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு, விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிக்க வருவர்.குறிப்பாக செவ்வாய்கிழமைகளில் வரும் பக்தர்கள் கூட்டம் ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருகிறது. அந்த சமயங்களில் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. அங்கு நிலவும் குறைபாடுகளால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.அதற்கு தீர்வு காணும் விதமாக, நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், போலீஸ் எஸ்.பி., ஸ்ரீநிவாசபெருமாள் தலைமையிலான குழுவினர் சிறுவாபுரியில் கள ஆய்வு மேற்கொண்டனர். போலீசார், வருவாய் துறை, வட்டார வளர்ச்சி துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.கலெக்டர் கூறியதாவது:சிறுவாபுரியில் செவ்வாய் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் அதற்கு ஏற்ப வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்து சரி செய்வது, கடைகளை ஒழுங்குப்படுத்தி சாலையை விரிவாக்கம் செய்வது, வாகனங்கள் நிறுத்த கோவில் அருகே போதிய பார்க்கிங் வசதி ஏற்படுத்துவது, பக்தர்கள் கூட்டத்தை முறைப்படுத்துவது, பக்தர்கள் ஓய்வு மற்றும் தங்கும் இடம், குடிநீர் வசதி, போதிய கழிவறைகள் ஏற்படுத்துவது குறித்து கள ஆய்வு செய்தோம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி