உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாணவர்களுக்கு பேச்சு போட்டி

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாணவர்களுக்கு பேச்சு போட்டி

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்களின் நினைவாக காந்தி, நேரு, அம்பேத்கர், ஈ.வெ.ரா., மற்றும் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக, திருவள்ளூர் மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி, ஜூலை 11ல் நடத்தப்படுகிறது.கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவோருக்கு முறையே 5,000, 3,000 மற்றும் 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.மேலும், போட்டியில் பங்கேற்போரில், அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை தனியாக தேர்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை 2,000 வீதம் வழங்கப்படும்.விருப்பமுள்ள மாணவ - மாணவியர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்லுாரி முதல்வர் வாயிலாக, ஜூலை 9ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை