| ADDED : ஜூன் 02, 2024 12:16 AM
பூண்டி:பூண்டி ஒன்றியம் எல்லப்பநாயுடுபேட்டை, புதுார், ராமஞ்சேரி கிராமங்களில், 20,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இங்கு, தொடர்ந்து ஒரு வாரமாக பகல், இரவு நேரத்தில் அடிக்கடி மின்வெட்டு தொடர்வதுடன், அவ்வப்போது குறைந்தளவு மின்னழுத்தத்தால் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவில், மூன்று மணி நேரம் வரை மின்வெட்டு தொடர்கிறது.இதனால், மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன. புழுக்கத்தால் குழந்தைகள், முதியவர்கள் துாக்கத்தை தொலைத்து கடும் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில், சீரான மின் வினியோகத்திற்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியம் காட்டுவதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, மாவட்ட மின்வாரிய அதிகாரிகள், மின்வெட்டு மற்றும் குறைந்தழுத்த பிரச்னைக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.