திருவல்லிக்கேணி: மனைவியுடன் தகாத உறவில் இருந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை கத்தியால் வெட்டி கொலை செய்த கணவரை, போலீசார் கைதுசெய்தனர்.பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சின்ன தம்பி என்கிற அப்புராஜ், 35; பெயின்டர். இவருக்கு, சித்ரா என்பவருடன்திருமணமாகி ஒரு மகள், மகன் உள்ளனர்.கடந்த 12ம் தேதி அதிகாலை, 4:00 மணியளவில், இவரது மனைவி சித்ராவுடன், உறவினரான தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சிவா என்பவர் நெருக்கமாக இருந்ததை பார்த்து, தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் சித்ரா,பல்லவன் சாலையிலுள்ள தன் தாய் வீட்டிற்குச் சென்றார். இதையடுத்து மனைவியை காண, கடந்த 13ம் தேதி இரவு மாமியார் வீட்டிற்கு, அப்புராஜ் மதுபோதையில் சென்றுள்ளார். அங்கு,இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.அப்போது அப்புராஜ், மனைவியின் காதை கடித்தார். காயமடைந்த அவரது மனைவி, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, பல்லவன் சாலையில் பிளாட்பாரத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சிவா உறங்கிக் கொண்டிருந்தார்.அங்கு வந்த அப்புராஜ் கல்லால் தாக்கியும்,கத்தியால் முகம், கை உள்ளிட்ட இடங்களிலும், சிவாவை வெட்டியுள்ளார்.பலத்த காயமடைந்த நிலையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவா, நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதைத்தொடர்ந்துதிருவல்லிக்கேணி போலீசார், இதை கொலை வழக்காக பதிவு செய்து, அப்புராஜை நேற்று கைது செய்தனர்.