| ADDED : ஜூலை 25, 2024 11:38 PM
கடம்பத்துார்:சென்னையில் சலவை பவுடர்கள் விற்பனை செய்யும் இ.ஐ.பி.ஆர்., என்ற தனியார் கம்பெனியில், சீனியர் மேலாளராக பணிபுரிந்து வருபவர் மணிமாறன்.திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் ஏரியல், மற்றும் டைடு போன்ற சலவை பவுடர்கள் போலியாக விற்பனை செய்வதாக மணிமாறனுக்கு புகார் வந்தது. இதுகுறித்து மணிமாறன் அளித்த புகாரின்படி, மணவாளநகர் போலீசார், அப்பகுதியைச் சேரந்த சலவை பவுடர்கள் விற்பனை செய்யும் பெரியமருது, 41, மற்றும் பழனிவேல், 53, ஆகியோரிடம், நேற்று முன்தினம் விசாரித்தனர்.விசாரணையில், அவர்களிடம் போலியாக ஏரியல் லேபிள் ஒட்டிய, 100 கிலோ மதிப்புள்ள 2,490 சலவை பவுடர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 25,900 ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார், போலி சலவை பவுடர்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.