உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வள்ளி திருக்கல்யாணம் விமரிசை

வள்ளி திருக்கல்யாணம் விமரிசை

வள்ளிமலை:வள்ளியை முருப்பெருமான் கவர்ந்த தலம், வேலுார் மாவட்டம், பொன்னை அடுத்த வள்ளிமலை. மலைக்கோவில் மற்றும் மலையடிவாரத்தில் சரவண பொய்கையை ஒட்டிய கோவில்களில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார்.மாசி பிரம்மோற்சவம் வள்ளிமலையில் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் சிம்மம், தங்கமயில், அன்னம், யானை வாகனம் என, பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய முருகப்பெருமான், கடந்த 10ம் தேதி தேரில் பவனி வந்தார்.தொடர்ந்து, நான்கு நாட்களாக கிரிவல பாதையில் உள்ள கோட்டநத்தம், சின்னகீசகுப்பம், சோமநாதபுரம், பெருமாள் குப்பம் என, பல்வேறு கிராமங்களில் எழுந்தருளிய முருகப்பெருமான், நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு கோவில் நிலைக்கு வந்தடைந்தார்.அதை தொடர்ந்து நேற்று வள்ளி திருக்கல்யாணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை