போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் பகுதியில், ரயில் மேம்பாலமும், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையும் இணையும் இடம், எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும் முக்கிய சந்திப்பு. தற்போது, இந்த இடம் 'பார்க்கிங்' பகுதியாக மாறி வருகிறது.இரவு நேரம் மட்டுமின்றி, பகல் நேரத்திலும் ஏராளமான கனரக வாகனங்கள், இங்குள்ள பெரும்பகுதி சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால், இச்சந்திப்பில், மூன்று திசைகளில் இருந்து வரும் வாகனங்கள் திக்குமுக்காடி வருகின்றன. போக்குவரத்து நெரிசல் ஒருபுறம், விபத்து அபாயம் மறுபுறம் என்ற ஆபத்தான சூழல் நிலவுகிறது.எனவே, இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க, நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும், தேசிய நெடுஞ்சாலை ரோந்து படையினரும் தொடர்ந்து கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.