உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வளர்பிறை பிரதோஷ வழிபாடு

வளர்பிறை பிரதோஷ வழிபாடு

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தின் தென்மேற்கில் அமைந்துள்ளது பஞ்சாட்சரமலை. இந்த மலை உச்சியில், 700 ஆண்டுகள் பழமையான மரகதேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். பக்தர்களே இந்த சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர்.பிரதோஷம், சோமவார பூஜை உள்ளிட்டவை இங்கு நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மாலை மரகதேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.அதேபோல், பொதட்டூர்பேட்டை அடுத்த ஸ்ரீகாவேரிராஜபேட்டை ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாண சுந்தரேசனார், வங்கனுார் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில்களிலும் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி