உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண்ணை தாக்கிய தம்பதிக்கு வலை

பெண்ணை தாக்கிய தம்பதிக்கு வலை

திருத்தணி: திருத்தணி அடுத்த வி.சி.ஆர்.கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி அஸ்வினி, 21. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான கார்த்தி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அஸ்வினி வீட்டில் தனியாக இருந்த போது, கார்த்தி, அவரது மனைவி இந்துமதி ஆகியோர் சென்று, அஸ்வினியை தாக்கி, உடைகளை சேதப்படுத்தினர். இது குறித்து அஸ்வினி கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் கார்த்தி, இந்துமதி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ