உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தவில், நாதஸ்வரம் பள்ளி திறப்பு விழா எப்போது?

தவில், நாதஸ்வரம் பள்ளி திறப்பு விழா எப்போது?

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான நந்தி ஆற்றின் கரையோரம் கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் உள்ளது.இக்கோவில் வளாகத்தில். கடந்தாண்டு ஜூலை மாதம், முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், 98 லட்சம் ரூபாய் மதிப்பில் நாதஸ்வரம், தவில் பயிற்றுவிக்கும் பயிற்சி பள்ளி கட்டடம் கட்டுவதற்கு, 'டெண்டர்' விடப்பட்டது. இப்பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.தவில், நாதஸ்வரம் பயிற்சி பள்ளியில், கடந்தாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த புதிய கட்டடம், 3,500 சதுரடியில் இரண்டு வகுப்பறைகள் உள்ளன.ஒவ்வொரு வகுப்பறையிலும், 50 மாணவர்கள் அமரும் வகையில் ஏற்படுத்தப்பட்ட கட்டடத்தில், ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து கற்கும் வசதிகள் கொண்ட கட்டடம், தற்போது திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.இதுகுறித்து கோவில் அதிகாரி கூறுகையில், 'தவில், நாதஸ்வரம் பயிற்சி பள்ளி கட்டடம் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளதாக, ஹிந்து அறநிலை துறை ஆணையருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம். திறப்பு விழா குறித்து அரசு தான் முடிவெடுக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை