உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரியில் எரிவாயு தகனமேடை பயன்பாடிற்கு வருவது எப்போது?

பொன்னேரியில் எரிவாயு தகனமேடை பயன்பாடிற்கு வருவது எப்போது?

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட திருஆயர்பாடி கள்ளுக்கடைமேடு சுடுகாடு பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.40 கோடி ரூபாயில், நவீன எரிவாயு தகனமேடை கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. எரிவாயு உருளை பொருத்தும் இடம், புகைப்போக்கி குழாய், ஆம்புலன்ஸ் வந்து நிற்க இடம், எரிவாயு சேமிப்பு கிடங்கு, ஜெனரேட்டர் அறை, அலுவலக அறை என, மொத்தம், 2,800 சதுர அடியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.சடலங்களை எரிவாயு வாயிலாக எரிப்பதற்கான இயந்திரங்கள், டிராலி, எரிவாயு குழாய் இணைப்பு, மின்இணைப்பு, சுற்று சுவர், பாதைவசதி உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.கட்டுமான பணிகள் முடிந்து, ஓராண்டு ஆன நிலையில் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் இருக்கிறது. லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிகள் என நகராட்சி நிர்வாகம் மேற்கண்ட திட்டத்தை கிடப்பில் போட்டு உள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் முழுதும் தளர்த்தப்பட்டு ஒரு மாதம் முடிந்து உள்ள நிலையில், எரிவாயு தகன மேடை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை