உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றிய பகுதியைச் சேர்ந்தவர் எல்லம்மாள், 43. இவர் திருத்தணி பகுதியில் சித்தாள் வேலை செய்து வந்தார். கடந்த, 12ம் தேதி அரசு பேருந்து மூலம் திருத்தணி கமலா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். அதன்பின் எல்லம்மாள் வீட்டிற்கு வரவில்லை.எல்லம்மாள் சகோதரர் போஸ், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால்,கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து எல்லம்மாளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி