உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 1,000 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.18,000 அபராதம் வசூல்

1,000 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.18,000 அபராதம் வசூல்

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பை, டம்ளர் உள்ளிட்டவைகளுக்கு தடை அமலில் உள்ளது. இந்த தடையை மீறி, பூக்கடைகள், ஸ்வீட் கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதையடுத்து, கமிஷனர் திருநாவுக்கரசு உத்தரவின்படி, சுகாதார அலுவலர் மோகன் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள், ஒரு வாரமாக பூக்கடை, பழக்கடை, ஹோட்டல்கள் மற்றும் மொத்த வியாபார கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.இதில், 1,000 கிலோ பிளாஸ்டிக் பை, டம்ளர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்வதற்காக, திடக்கழிவு மேலாண்மை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.மேலும், பிளாஸ்டிக் பை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளர்களிடம், 18,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால், கடைக்கு 'சீல்' வைக்கப்படும் என, கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ