உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 1,300 போதை மாத்திரைகள் 15 கிலோ கஞ்சா பறிமுதல்: மீஞ்சூரில் இருவர் கைது

1,300 போதை மாத்திரைகள் 15 கிலோ கஞ்சா பறிமுதல்: மீஞ்சூரில் இருவர் கைது

மீஞ்சூர்:ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1,300 போதை மாத்திரைகள், 15 கிலோ கஞ்சா ஆகியவற்றை மதுவிலக்கு போலீசார் கைப்பற்றி, கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர். செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்வோர், கடத்தி வருவோரை, தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில் மற்றும் பேருந்துகளையும், அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் இருந்து போதை மாத்திரை மற்றும் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வரப்படுவதாக, மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார், ரயில் மற்றும் பேருந்துகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். சூளூர்பேட்டை ரயிலில் வந்த சந்தேக நபர்கள் இருவரை பிடித்து, அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அதில், 1,300 போதை மாத்திரைகள், 15 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. விசாரணையில், அவர்கள் மீஞ்சூர் அடுத்த மெரட்டூர் கிராமத்தை சேர்ந்த அஜய், 24, செங்குன்றம் வடகரை பகுதியை சேர்ந்த விஷ்வா, 20, என்பது தெரிந்தது. இவர்கள், வடமாநிலங்களில் இருந்து, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ