மேலும் செய்திகள்
அமைச்சர் சொன்னது பொய்; அரசு டாக்டர்கள் எதிர்ப்பு
10-Sep-2024
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில் வீட்டு சிலிண்டர்கள், வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவதாக, மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.டி.எஸ்.பி., செந்தில்குமார் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் இந்துராணி மேற்பார்வையில், எஸ்.ஐ., சசிகுமார் தலைமையில், மூன்று பேர் கொண்ட குழுவினர் ஊத்துக்கோட்டையில் உள்ள ஹோட்டல்கள், டீ கடைகள் ஆகியவற்றில், நேற்று திடீர் சோதனை செய்தனர்.இதில், பஜாரில் உள்ள கடைகளில் நடத்திய சோதனையில், 15 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அந்த 15 சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், “ஊத்துக்கோட்டையில் வீட்டு உபயோக சிலிண்டர்கள், வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்தன. இனி அடிக்கடி சோதனை செய்யப்படும்,” என்றனர்.
10-Sep-2024