கும்மிடியில் 16 செ.மீ., மழை பதிவு
திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், மாவட்டத்தில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 16 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த, 16ம் தேதி துவங்கியது. அன்றைய தினம் முதல் தினமும் இரவில், பலத்த மழையும், பகலில், விட்டு, விட்டும் மழை பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம், பாதிப்படையும் பகுதிகளில், மீட்பு நடவடிக்கைக்காக, பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளன. தற்போது, கடலோர பகுதிகளான மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 16.4 செ.மீ., மழை பதிவாகியது. பொன்னேரி 13.6, தாமரைப்பாக்கம் 4.8, சோழவரம் 4.1, ஊத்துக்கோட்டை 3.3, ஜமீன்கொரட்டூர் 2.7, ஆவடி 2.5, செங்குன்றம் 2.3 மழையளவு பதிவாகி உள்ளது.