உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வருவாய் துறையில் 18 தட்டச்சர் நியமனம்

வருவாய் துறையில் 18 தட்டச்சர் நியமனம்

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறையில், 18 தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் - 4 தேர்வின் வாயிலாக, 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, 18 பேருக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் தட்டச்சர் பணி நியமன ஆணையை வழங்கினார்.நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை