உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டூ - வீலருக்கு தீ வைத்த 2 பேர் கைது

டூ - வீலருக்கு தீ வைத்த 2 பேர் கைது

திருத்தணி:வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த இருவரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் என்ற பாட்ஷா, 31. கூலி தொழிலாளி. இவர் சில தினங்களுக்கு முன் சித்துார் மாநில நெடுஞ்சாலை வழியாக நடந்து வந்த போது, அவர் மீது முன்விரோதம் காரணமாக, திருத்தணி நேரு நகரை சேர்ந்த ராஜேந்திரன், 24, கஜபதி, 25 உட்பட மூன்று பேர், நாட்டு வெடிகுண்டை வீசினர். இதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய பாட்ஷா, திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். இந்நிலையில், நேற்று ராஜேந்திரன், கஜபதி இருவரும் பாட்ஷா வீட்டிற்கு வந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்து, தப்பினர். அங்கிருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இது குறித்து திருத்தணி போலீசில் பாட்ஷா புகார் அளித்தார். இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை