உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்ஒயரில் சிக்கி 2 பசு மாடுகள் உயிரிழப்பு

மின்ஒயரில் சிக்கி 2 பசு மாடுகள் உயிரிழப்பு

மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த, நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நிஜந்தன், 30; இவர், மாடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை, மேய்ச்சலுக்கு சென்ற இவரது இரண்டு பசு மாடுகள், மாலை வீடு திரும்பவில்லை.அதையடுத்து, நிஜந்தன், அவற்றை தேடி சென்றபோது, அதே பகுதியில் அறுந்து கிடந்த மின்ஒயரில் சிக்கி மாடுகள் இறந்து கிடப்பதை கண்டார்.நேற்று காலை முதல், பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்தபடி இருந்தது. காற்றில் மின்சார கம்பிகள் அறுந்து அதில். மேய்ச்சலுக்கு சென்று மாடுகள் சிக்கி இறந்தது உள்ளன.தகவல் அறிந்த மின்வாரியத்தினர் அங்கு சென்று மின்இணைப்புகளை துண்டித்து, அறுந்த மின்ஒயர்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை