உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக் மீது லாரி மோதி 2 பேர் படுகாயம்

பைக் மீது லாரி மோதி 2 பேர் படுகாயம்

திருத்தணி:திருத்தணி அடுத்த அகூர் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன், 21. இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் ராகுல், 20 என்பவருடன் இரு சக்கர திருத்தணி நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது குமாரகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த ஈச்சர் லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பூவரசன் பலத்த காயமடைந்து, ஆபத்தான நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராகுல் லோசான காயங்களுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி