உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 21 நாள் கோடைகால இலவச பயிற்சி முகாம்

21 நாள் கோடைகால இலவச பயிற்சி முகாம்

திருவள்ளூர், திருவள்ளூர் விளையாட்டு அரங்குகளில், 21 நாள் இலவச கோடைகால பயிற்சி முகாம், வரும் 25ம் தேதி துவங்குகிறது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடப்பு ஆண்டிற்கான கோடைகால பயிற்சி முகாம், வரும் 25 - மே 15 வரை தொடர்ந்து 21 நாட்களுக்கு காலை - மாலை நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமில் தடகளம், கால்பந்து, வாலிபால், ஹாக்கி மற்றும் 'வுஷூ' ஆகிய ஐந்து விளையாட்டுகள் நடைபெற உள்ளன.இதில், 18 வயதிற்குட்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்கலாம். தடகளம், கால்பந்து மற்றும் 'வுஷூ' ஆகிய மூன்று விளையாட்டுகள், திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்திலும், 'ஹாக்கி' விளையாட்டு ஆவடியில் உள்ள காஸ்மோஸ் எச்.வி.எப்., மைதானத்திலும், வாலிபால் தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, ஆவடியிலும் நடைபெறும்.பயிற்சியில் சேர, லாவண்யா - தடகளம் - 80729 08634, காயத்ரி - கால்பந்து - 95662 56028, தீபன் - 'வுஷூ' - 99442 90515, வினோத்ராஜ் - வாலிபால் - 98940 28353 மற்றும் இளங்கோ - ஹாக்கி -- 94448 45842 ஆகிய எண்களில் பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளலாம். இலவசமாக நடைபெறும் பயிற்சி முகாமின் இறுதியில், சான்றிதழ் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை