உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பார்சல் வாகனத்தில் கடத்திய 287 கிலோ குட்கா பறிமுதல்

பார்சல் வாகனத்தில் கடத்திய 287 கிலோ குட்கா பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு தனியார் பார்சல் சர்வீஸ் பெயரில் உள்ள வாகனத்தில் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு போலீஸ் படையினர், அந்த வாகனத்தை ஆந்திர எல்லையில் இருந்து பின் தொடர்ந்து சென்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமம் அருகே அந்த வாகனத்தை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அதில், 287 கிலோ குட்கா இருப்பது தெரிந்தது. வாகனத்துடன் குட்கா பண்டல் களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ரூபாய்.பார்சல் வாகன ஓட்டுனரான தானகுளம் பகுதியை சேர்ந்த ஆனந்த், 37, குட்கா கடத்தலில் ஈடுபட்டஹரியானா மாநிலத்தை சேர்ந்த சதீஷ்குமார், 49, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த நிர்மல்குமார், 38, ஆகிய மூவரை கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.l திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சிலர் கடையில் பதுக்கி விற்பனைசெய்வதாக திருவாலங்காடு போலீசாருக்குதகவல் கிடைத்தது.அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ கோபால் தலைமையிலான போலீசார் சோதனைசெய்தனர்.அப்போது சின்னம்மா பேட்டையில் ரயில் நிலைய சாலையில் விக்னேஷ், 23. என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட 12 குட்கா ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து விக்னேஷை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.l திருவள்ளூர் அடுத்த பூங்கா நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்,72. இவர், அப்பாசாமி சாலையில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடையில், தடை செய்யப்பட்ட, ஹான்ஸ், விமல் போன்ற போதை பொருள் விற்பதாக திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம், போலீசார் கடையில் சோதனையிட்டனர். அப்போது, விஸ்வநாதன் சோதனை மேற்கொண்ட காவலர்களை திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.இதுகுறித்து, எஸ்.ஐ., கோபிகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், தாலுகா போலீசார் வழக்கு பதிந்து,கடையில், 1,140 ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து, விஸ்வநாதன்மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.l கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில், கவரைப்பேட்டை போலீசார் சோதனை மேற்கொண்டனர். பள்ளி எதிரே உள்ள பெட்டிக் கடையில் விற்பனைக்கு வைத்திருந்த, 20 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர் ராமன், 55, என்பவரை கைது செய்தனர். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை