உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின் கசிவால் தீ விபத்து 3 குடிசைகள் எரிந்து நாசம்

மின் கசிவால் தீ விபத்து 3 குடிசைகள் எரிந்து நாசம்

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த புட்லுார் ராமாபுரம் பகுதியில் உள்ள ராம் நகரில், ஹிந்து மராட்டி சமூகத்தைச் சேர்ந்த 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடுகுடுப்பை தொழில் செய்து வருகின்றனர்.இந்நிலையில், மூன்று மாதங்களாக பூட்டிக் கிடந்த ராஜா, 34, என்பவரது வீட்டில், நேற்று மாலை 3:30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.இதில், தீ மளமளவென பரவி அருகில் உள்ள ராதாரவி, 34, சந்திரசேகரன், 34, ஆகியோர் குடிசை வீடுகளிலும் தீ பரவி எரிந்து நாசமாகின.தகவறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் அளித்த தகவலின்படி, திருவள்ளூர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகின எனவும் போலீசார் தெரிவித்தனர். திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ