மேலும் செய்திகள்
மூச்சுத்திணறி குழந்தை சாவு
22-Nov-2024
கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணா. இவர் கவரைப்பேட்டை அடுத்த குருவராஜகண்டிகை கிராமத்தில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அங்கு பிரம்பு கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவரது 3 வயது மகள் வெங்கடலட்சுமி, நேற்று ‛டீ'யில் பிஸ்கட்டை தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென குழந்தைக்கு புரை ஏறி, மூச்சு திணறல் ஏற்பட்டது. குழந்தை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தது.கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
22-Nov-2024