உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 35 வீடுகள் சேதம் 13 கால்நடை பலி

35 வீடுகள் சேதம் 13 கால்நடை பலி

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் இரு நாட்கள் பெய்த பலத்த மழையால், இதுவரை, 25,122 விவசாய நிலங்களில் தண்ணீர் மூழ்கி உள்ளது. மேலும், 35 வீடுகள் சேதமடைந்துள்ளன. 13 கால்நடைகள் பலியாகி உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த, 15,16 ஆகிய இரண்டு நாட்கள் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தின் பெரும்பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இரண்டு நாட்கள் பெய்த மழையால், பொன்னேரி-9, ஆவடி-1, ஊத்துக்கோட்டை-10, திருத்தணி-10, பள்ளிப்பட்டு-3, ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர் தலா 1 என, மொத்தம், 35 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், திருத்தணி, பூந்தமல்லி, திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ஆகிய பகுதிகளில், பசுமாடு-3, ஆடு-6, கன்று குட்டி-4 என மொத்தம், 13 கால்நடைகள் பலியாகி உள்ளன.ஆறு மின்கம்பங்களும், 15 மின்மாற்றிகளும் மழையால் சேதமடைந்தன. இதில், அனைத்து மின்கம்பம் மற்றும் 14 மின்மாற்றிகள் உடனடியாக சீரமைக்கப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுதும் பெய்த பலத்த மழையால், வேளாண் மற்றும் தோட்டக்கலை என, 25,122 ஏக்கர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால், 13,120 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை