மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
27-Sep-2024
திருத்தணி:திருத்தணி நகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்களாக இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடத்தின.இதில், நகராட்சி தலைவர் சரஸ்வதி, ஆணையர் அருள் ஆகியோர் மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். தொடர்ந்து மூன்று மருத்துவர்கள் தலைமையில், செவிலியர்கள், ஆய்வக ஊழியர்கள் என, 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ரத்தப் பரிசோதனை, சர்க்கரை நோய், கண், பல் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.முகாமில், 350க்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள், பம்ப் ஆப்பபேரட்டர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
27-Sep-2024